சூளைமேடு எஜுகேஷனல் அண்ட் வெல்ஃபேர் டிரஸ்ட் வளாகத்தில் (Choolaimedu Education and Welfare Trust – CEWT) 01. 03. 2022 – செவ்வாய்க்கிழமை மாலை 6.30 மணி அளவில் UPSC & TNPSC மாணவர்களுக்கான வழிகாட்டுதல் நிகழ்ச்சி நடைபெற்றது. Young India IAS Academyயின் முதல்வரும் கல்வியாளரும் ஆன ஜனாப் வாஜித் ஷா அவர்கள் வழிகாட்டுதல் நிகழ்ச்சியில் சிறப்புரையாற்றினார். மாணவர்கள் எதை படிக்க வேண்டும், எப்படி படிக்க வேண்டும், குறிப்பெடுக்க வேண்டியதின் அவசியம், எந்தெந்த துறைகளில் மிக அதிக கவனம் செலுத்த வேண்டும் என்பது போன்ற மிகப் பயனுள்ள தகவல்களை பகிர்ந்து கொண்டார். அவர் நடத்தும் இணைய தளம் மற்றும் அவர் எழுதியுள்ள புத்தகங்களை அறிமுகம் செய்ததுடன் பொது அறிவு கேள்வி பதில்கள் அடங்கிய புத்தகங்களை நமது நூலகத்திற்கு அன்பளிப்பாக வழங்கினார். மாணவர்கள் அவரது உரையை கவனத்துடன் கேட்டு பயன் பெற்றனர். தங்களது சந்தேகங்களை இறுதியில் கேட்டு விளக்கம் பெற்று கொண்டனர். முன்னதாக மாணவர்கள் ஒவ்வொருவரின் படிப்பு முறை, பொழுதுபோக்கு, புத்தகங்கள் ஆகியவற்றை பற்றி தனித்தனியாக கேட்டறிந்து அவர்களுக்கு தேவையான வழிகாட்டுதல்களை கொடுத்தது மிகவும் சிறப்புக்குரியது. CEWT- வளாகத்தில் தங்கியுள்ள மாணவர்களும், சுற்றுப்புறங்களில் உள்ள மாணவர்களும் குறிப்பாக நங்கநல்லூர், பல்லாவரம் ஆகிய பகுதிகளில் இருந்தும் வந்து கலந்து கொண்டு பயனடைந்தனர்.