03.06.2022 வெள்ளியன்று மாலை IIC ஹாலில் சிறப்பாய் நடைபெற்றது. நிகழ்வின் துவக்கத்தில் திருக்குர்ஆன் வசனங்கள்அதனின் மொழிபெயர்ப்புடன் Dr. KHALIFATULLAH அவர்கள் ஓதினார். அதைத் தொடர்ந்து Dr. ZAHEER அவர்கள் வரவேற்புரை நிகழ்த்தினார்.
JIH – தமிழ்நாடு மற்றும் பாண்டிச்சேரியின் அமைப்புச் செயலாளர் ஜனாப் ஜலாலுத்தீன் அவர்கள் சிறப்புரையாற்றினார். Dr. Salahudeen, Dr. Khaleelur Rahman, ஆகிய அனைவரும் கலந்துகொண்டு உரையாற்றினார்கள். மருத்துவ சேவை எல்லாருக்கும் கிட்ட வேண்டும்; இலவசமாகவும், மக்களுக்கு கட்டுபடியாகக் கூடிய அளவில் அந்த சேவை அமைய வேண்டும். அதற்காக நாமனைவரும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும் என இக்கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது. இதில் மருத்துவர்கள், துணை மருத்துவர்கள், மருத்துவ கல்லூரி மாணவ மாணவிகள் உட்பட ஐம்பதிற்கும் மேலானோர் கலந்து கொண்டனர். கலந்துரையாடினர். MSSன் சென்னை மாநகரத் தலைவர் Dr. Shabbir அவர்களின் நன்றியுரையுடன் இந்நிகழ்வு நிறைவுபெற்றது.