அல்லாஹ்வின் மார்க்கத்தை பாதுகாக்கும் பணியில் அன்றைய ஆலிம்களான ஸஹாபாக்கள் உறுதியுடன் உழைத்து நமக்கெல்லாம் முன்மாதிரியாகத் திகழ்ந்தார்கள். அந்த வழியில் அறிவு தீபத்தை ஏந்திக்கொண்டிருக்கும் இன்றைய ஆலிம்களை ஒருங்கிணைத்து செயல்படும் மார்க்க அறிஞர்களின் அமைப்பு ராபித்தத்துல் உலமா
Rabitatul Ulema (Tamil) – மார்க்க அறிஞர் பேரவை (தமிழ்) 08.03.2022 செவ்வாயன்று காலை சூளைமேடு கல்வி மற்றும் நல அறக்கட்டளை வளாகத்தில் நடைபெற்றது. இதில் 19 தமிழ் உலமா பெருமக்கள் கலந்துகொண்டனர். மௌலானா முஹம்மத் ஹனீஃபா மன்பஈ அவர்கள், நமது சமூகத்தின் சீர்திருத்தங்கள் குறித்தும் உலமா பெருமக்கள் நமது சமூகத்திற்கு எத்தகைய வழிகாட்டுதல்களை தர கடமைப்பட்டிருக்கின்றோம் என்பதின் முக்கியதுவத்தை எடுத்துரைத்தார்கள். சிறந்த கருத்துப்பரிமாற்றங்கள், கலந்துரையாடல்களுக்கு இவ்வமர்வு இனிதே நிறைபெற்றது.
இவ்வமர்வில் மாநில அமைப்புச் செயலாளர் ஜனாப் கே. ஜலாலுத்தீன், மெட்ரோ நாசிம் ஜனாப் நசீர் அதாவுல்லாஹ், சூளைமேடு கிளைத் தலைவர் ஜனாப் அஹ்மத் அலி ஆகியோர் கலந்து கொண்டனர்.