Blog Detail

ஹிதாயா மகளிர் கல்லூரியின் இணையதள துவக்க விழா (Website launching)

ஜமாஅத் தே இஸ்லாமி ஹிந்த் சென்னை மெட்ரோ சார்பாக
பாராட்டு சான்றிதழ் வழங்குதல் மற்றும் இணையதள துவக்க விழா நடைபெற்றது.

ஒழுக்கமே சுதந்திரம் என்ற பரப்புரையின் ஒரு பகுதியாக பள்ளி மற்றும் கல்லூரி மாணவ மாணவியருக்கான கட்டுரை போட்டி நடத்தப்பட்டது.

அதில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு மற்றும் பாராட்டு சான்றிதழ் வழங்கும் விழா 19.10.2024 சனிக்கிழமை மாலை 4 மணி அளவில் வேப்பேரி பெய்ன் மெமோரியல் பள்ளியில் நடைபெற்றது.

ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த் தமிழ்நாடு பாண்டிச்சேரி தலைவர் மௌலவி. ஹனிஃபா மன்பயி அவர்கள் துவக்க உரையாற்றினார்கள். மனிதனுக்கான ஒழுக்க நெறிமுறைகளை அவனைப் படைத்த இறைவனால் மட்டுமே வழங்க முடியும் என்று கூறி, ஒழுக்கத்தின் முக்கியத்துவம் இன்றைய காலகட்டத்தில் அதன் அவசியம் ஆகியவற்றை எடுத்துரைத்தார்.

நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக ஹிதாயா மகளிர் கல்லூரியின் இணையதள துவக்கம் (Website launching) நடைபெற்றது. தலைவர் அவர்கள் துவக்கி வைத்தார்கள்.

ஹிதாயா கல்லூரியை அறிமுகப்படுத்தி அதன் சேர்மன் நசீர் அத்தாவுல்லா அவர்கள் உரையாற்றினார்.

ஒழுக்கம் என்பது மனித வாழ்வின் பிரிக்க முடியாத அம்சம். இங்கு படிக்கும் மாணவ மாணவிகள் ஒழுக்கத்தில் சிறந்து விளங்குவார்கள் என்று உறுதியளித்தார்.

கட்டுரை போட்டிகளில் வென்றவர்களுக்கும் கலந்து கொண்ட மாணவ மாணவியருக்கும் பரிசுகளும் சான்றிதழ்களும் தமிழக தலைவர் மற்றும் சிறப்பு விருந்தினர்களால் வழங்கப்பட்டது.

தாங்கல் மற்றும் அயனாவரம் பகுதிகளைச் சேர்ந்த GIO மாணவிகள் இரண்டு மேடை நாடகங்கள் நடத்தி காட்டினார்கள்.

அதன் வாயிலாக ஒழுக்கத்தின் சிறப்புகளையும், அவற்றை பின்பற்ற வேண்டியதன் அவசியத்தையும் மிக சிறப்பாக மக்களுக்கு எடுத்து கூறினார்கள்.

ஜஸ்டிஸ் பஷீர் அஹ்மத் பெண்கள் கல்லூரியின் முதல்வர் மற்றும் புவனேஸ்வரி பள்ளி முதல்வர் ஆகியோரின் சிறப்புரைகளைத் தொடர்ந்து Good word பள்ளியின் தாளாளர் I. ஜலாலுதீன் அவர்களின் நிறைவுறையுடன் நிகழ்ச்சி இனிதே நிறைவேறியது.

சென்னையின் பல பகுதிகளில் இருந்து ஆண்களும் பெண்களும் திரளாக கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *