செப்டம்பர் – நவம்பர் 2022
28.08.2022 அன்று சென்னை, திருவல்லிக்கேணியிலியிருக்கும் BM Convention Hallல், அனைத்து ஆண், பெண் உறுப்பினர்கள், ஊழியர்களுக்கான ஒரு அமர்வு நடத்தப்பட்டது. இதில் சுமார் 250 பேர்கள் கலந்து கொண்டனர்.
முஹல்லா மாநாடு in ENGLISH
சென்னை வாழ் ஆங்கில மொழி பேசும் மாணவர்கள், இளைஞர்கள், உறுப்பினர்கள், ஊழியர்கள், அபிமானிகள் (ஆண்கள், பெண்கள்) ஆகியோர் அனைவருக்கும், சென்னை வேப்பேரியிலுள்ள YMCA ஹாலில் ஆங்கில சொற்பொழிவுகள் கொண்ட முஹல்லா மாநாடு ஒன்றை 15.10.2022 | சனிக்கிழமையன்று மாலையில் மெட்ரோ சென்னை நடத்தியது. இதில் இரு நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர்.
இந்நிகழ்ச்சியில் மெட்ரோ ஆலோசனை குழ உறுப்பினர் ஜனாப் இம்ரான் லதீஃப் சேட் மற்றும் மெட்ரோ நாசிம் ஜனாப் அதாவுல்லாஹ் அவர்கள் உரையாற்றினார்கள். மெட்ரோ ஆலோசனை குழு உறுப்பினர் நன்றியுரையாற்றினார்.
முஹல்லா மாநாடு ஏற்படுத்திய தாக்கங்கள்:
“முஹல்லா மாநாடு” நமது இயக்க தோழர்களுக்கு உத்வேகத்தையும் உற்சாகத்தையும் தந்திருக்கின்றது.
இதனால் ஏற்பட்ட தொடர்புகளும் சந்திப்புகளும் தாக்கங்களையும், மக்களிடையே ஓர் உந்துதலையும் ஏற்படுத்தியிருக்கின்றன. தீன் என்பது ஒரு வாழ்க்கை நெறி என்பது புரிய ஆரம்பித்திருக்கிறது.
நமது பேச்சாளர்களின் உரைகள் தீன் குறித்து மக்கள் புரிந்திருந்த தவறான புரிதல்களை கலைத்திருக்கின்றன. அவர்களை சிந்திக்க வைத்துள்ளன.
பல கிளைகளில் / வட்டங்களில் அபிமானிகள் வட்டங்கள் ஆரம்பமாகியிருக்கின்றன. அவர்களுக்கான வாராந்திர வகுப்புகள் தொடங்கி நடைப்பெற்று வருகின்றன.
முஹல்லா மாநாடு ஒன்றில் கலந்துகொண்ட சிலரின் வேண்டுகோலுக்கிணங்க சென்னை பெரியமேட்டில் ஆங்கில நிகழ்ச்சிகள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன.
பள்ளிவாசல் நிர்வாகிகளுடனும், இமாம்களுடன், உலமா பெருமக்களுடனும் ஏற்பட்ட தொடர்புகள் பலப்பட்டுள்ளன. தொடர் சந்திப்புகள் நிகழ்ந்து கொண்டிருக்கின்றன.
பகுதிச்சார்ந்த முக்கிய பிரமுகர்களுடன் செல்வாக்கு மிக்கவர்களுடன் தொடர்புகளும் நட்பும் நமது இயக்க தோழர்களுக்கு ஏற்பட்டுள்ளது.
நமது அடுத்தடுத்த பரப்புரைகளுக்கும், நிகழ்ச்சிகளுக்கும், நமது ஆள்வளத்திற்கும் இந்து முஹல்லா மாநாடு அடித்தளமிட்டிருக்கிறது என்பது மிகையல்ல. இன்ஷா அல்லாஹ்.