26.02.2022 சனிக்கிழமை மாலை சென்னை மெட்ரோ ஆலோசனை குழு உறுப்பினர் ஜனாப் ஜான் முஹம்மது மற்றும் மக்கள் தொடர்பு துறை துணைத் தலைவர் ஜனாப் அஷ்ரப் அலி ஆகியோர் மாஸ்டர் அப்துல் கலாமை அவர்களுடைய இல்லத்தில் சந்தித்தார்கள். உடன் அப்துல் கலாமின் தாயும் தந்தையும் இருந்தார்கள். இஸ்லாமிய வாழ்வியல் கண்ணோட்டத்தில் ஒரு நீண்ட நேர உரையாடல் நிகழ்ந்தது. மேலும் மாஸ்டர் அப்துல் கலாமுக்கும் அவரது பெற்றோர்களுக்கும் இஸ்லாமிய புத்தகங்கள் அன்பளிப்பாய் கொடுக்கப்பட்டன. மேலும் ‘சமரசம்’ பத்திரிக்கையை அவர்களுக்கு அறிமுகப்படுத்தப்பட்டது. நல்லதொரு சந்திப்பு இது. இவர்களுடனான தொடர்புகள் இனி தொடர்ந்திருக்கும். இன்ஷா அல்லாஹ்.